news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம்?
tv

Also Watch

tv

Read this

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம்?

ஹர்திக் பாண்டியா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹர்திக் பாண்டியா

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் :

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து பாண்டியா வெளியேறியிருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 14ஆம் தேதி தொடங்குகிறது.

பயிற்சியாளரை மாற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முடிவு?

2026 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

அதேபோன்று பேட்டி பயிற்சியாளராக முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

டி.எஸ்.பி.யாகும் பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், முகேஷ் குமார் :

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரை டி.எஸ்.பி.யாக நியமனம் செய்ய பீகார் மாநில அரசு முதற்கட்ட பணிகளை செய்துள்ளது. மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களை பணிக்கு அமர்த்தும் கொள்கையின் கீழ் இந்த பதிகளை வழங்க இருக்கிறது. உள்துறை அமைச்சகத்திற்கு பொது நிர்வாகத்துறை இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளது.

Related Link
FIFA 2026: மைதானத்தில் மிரட்டிய ஜப்பான்

FIFA 2026: மைதானத்தில் மிரட்டிய ஜப்பான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டொமினிகன் நாட்டின் கடற்கரை சுற்றுலாத் தலத்தில் விபத்து

0
18 mins agoshare
தீ விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved