Also Watch
Read this

2026 FIFA World Cup (Courtesy: Reuters)
ஃபிஃபா கால்பந்தாட்ட தொடரில் ஜப்பான் அணி அதிரடி காட்டி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் குரூப் எஃப் பிரிவுக்கான லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் துனிசியா அணியை ஜப்பான் எதிர்த்து விளையாடியது. மாண்டெரேவில் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற ஆட்டத்தில், ஜப்பான் அணி ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்தது. பாதி ஆட்டத்தை நெருங்கும்போது விளையாட்டை வேகப்படுத்திய ஜப்பான் அணி 31 நிமிடங்களில் 2 கோல் அடித்திருந்தது.
முதல் பாதி வரை துனிசியாவை கோல் அடிக்க விடாமல் ஜப்பான் வீரர்கள் ஆட்டம் காட்டினர். இரண்டாவது பாதி விளையாட்டில் மீண்டும் அதே வேகத்துடன் ஆட்டத்தை தொடங்கிய ஜப்பான் அணி 69வது நிமிடத்தில் 3வது கோல் அடித்து அசத்தியது. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் ஆதிக்கம் வகித்தது.
போட்டியின் கடைசியாக இன்னொரு கோல் அடித்த ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் துனிசியாவை வென்றது. இதில், அயசே உடா 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved