Also Watch
Read this
By: Manigandan Raja

தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம் :
கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படத்தின் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் மிகவும் தனித்துவமான கதைக்களத்துடன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் என்ற தகவலை தெரிவித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அத்திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் வட சென்னை 2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாக பகிர்ந்து ரசிகர்களை உற்காகமூட்டியுள்ளார்.
நடிகர் ஜீவா நடிக்கும் ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் :

நடிகர் ஜீவா நடிக்கும் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11.11 மணிக்கு வெளியானது என்று படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved