news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news +2 தேர்வு முடிவுகள் - வழக்கம்போல் மாணவிகள் சாதனை
tv

Also Watch

tv

Read this

+2 தேர்வு முடிவுகள் - வழக்கம்போல் மாணவிகள் சாதனை

புதிய வசதி அறிமுகம்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சுமார் 8 லட்சம் பேர் எழுதிய +2 பொதுத்தேர்வில் 7,53,694 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடை​பெற்​றது. 3,412 மையங்​களில் 8.27 லட்​சம் மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர். 150க்​கும் மேற்​பட்ட மையங்​களில் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்​ரல் 20ஆம் தேதி வரை நடை​பெற்​றது.
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் இன்று மே 8ஆம் தேதி வெளியானது. மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் 95.20 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவிகள் 4,06,167 பேர் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 3, 47, 527 பேர் 93.19 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம்போலவே தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் இடம் பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் மாணவிகள், அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

100 சதவீதம் தேர்ச்சி
இந்த தேர்வில் பங்கெடுத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 2,639
இதில் அரசுப் பள்ளிகள் 489
தேர்ச்சி விகிதத்தில்
ஈரோடு
சிவகங்கை
கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.

மாவட்ட வாரியாக தேர்ச்சி
ஈரோடு - 98.87 சதவீதம்
சிவகங்கை - 98.05 சதவீதம்
கன்னியாகுமரி - 97.63 சதவீதம்
நெல்லை - 97.54 சதவீதம்
திருச்சி - 97 சதவீதம்

தேர்வு முடிவுகள்
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
results.digilocker.gov.in ஆகிய இணை​யதளங்​களில் தங்​களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய​வற்றை பதிவு செய்து, மாணவர்கள் தேர்வு முடிவு​களை அறிய​லாம். பள்ளி மாணவர்​கள் உறு​தி​மொழிப் படிவத்​தில் குறிப்​பிட்ட செல்​போன் எண் மற்​றும் தனித் தேர்​வர்​கள் இணை​ய​வழி​யில் விண்​ணப்​பித்​த​போது வழங்​கிய செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்தி மூல​மாக​வும் தேர்வு முடிவு​கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

புதிய வசதி அறிமுகம்
முதல்​முறை​யாக தமிழ்​நாடு மின்​ஆளுமை முகமை மூலம் வாட்​ஸ்​அப் செயலி​யில் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்​ளும் வசதி, இந்த முறை அறி​முகம் செய்​யப்​பட்​டு உள்​ளது. 78452 52525 என்ற எண்​ணுக்கு வாட்​ஸ்​அப்​பில் ‘Hi’ என்று குறுந்​தகவல் அனுப்​பி, அடுத்​தடுத்து துறை பெயர், தேர்​வர்​களின் வகுப்​பு, தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய​வற்றை பதி​விட்​டு, தேர்வு முடிவு​களை அறிய​லாம். இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்​ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Link
பொறியியல் படிப்புகளை படிக்க ஆன்லைன் பதிவு ஆரம்பம்

பொறியியல் படிப்புகளை படிக்க ஆன்லைன் பதிவு ஆரம்பம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருச்செந்தூர் அருகே என்கவுன்டர், பரபரப்பு பின்னணி

5
7 mins agoshare
திருச்செந்தூர் அருகே என்கவுன்டர், பரபரப்பு பின்னணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved