Also Watch
Read this

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
ஆன்-லைனில் விண்ணப்பம்
பி.இ., பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளை படிக்க விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தில், இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை மாணவர்கள் தங்களின் அடிப்படை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். அசல் சான்றிதழ்களை ஜூன் 6ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

29ஆம் தேதி தர வரிசை பட்டியல்
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஜூன் 5ஆம் தேதி சம வாய்ப்பு எண் வழங்கப்படும். ஜூன் 8ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று, 29ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

கலந்தாய்வு எப்போது?
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகள் படிக்க ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூன் 6 வரை அசல் சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாயும், பட்டியல் பிரிவினருக்கு 250 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், உயர் படிப்புகளுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.