news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு, மாணவர்கள் தயார்
tv

Also Watch

tv

Read this

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு, மாணவர்கள் தயார்

31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எம்பிபிஎஸ், BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை
இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களில், மாணவர் சேர்க்​கைக்​கான ‘நீட்’ தேர்வு நாடு முழு​வதும் சுமார் 5,500 மையங்​களில் இன்று, மே 3ஆம் தேதி நடை​பெறுகிறது. மருத்​து​வப் படிப்​பு​களிலும் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 22 லட்​சம் மாணவ, மாணவி​கள், இந்த தேர்வை எழுதுகின்​றனர். நீட் தேர்வு முடிவு​களை அடுத்த மாதம் வெளி​யிட தேசியத் தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது.

பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு, ராணுவ கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​பு​கள், கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் ஆகியவை தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. இந்த தேர்வை தேசியத் தேர்​வு​கள் முகமை - என்​டிஏ ஆண்​டு​தோறும் நடத்​துகிறது. 2026-27ஆம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் இன்று பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறுகிறது.

5,500 மையங்களில் தேர்வு
தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்​கள், நாடு முழு​வதும் 552 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 14 இடங்​களில் நீட் தேர்வு நடை​பெறுகிறது. சுமார் 5,500 மையங்​களில் நீட் தேர்வு நடை​பெறுகிறது. சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 9.47 லட்சம் மாணவர்​கள், 13.33 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 22.80 லட்​சம் பேர் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​து உள்​ளனர்.

தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறுகிறது. இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல், தாவர​வியல், விலங்​கியல் பாடங்​களில் இருந்து தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில் 180 கேள்வி​களுக்கு பதில் தர வேண்​டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​ வழங்​கப்​படு​கிறது. ஒரு தவறான பதி​லுக்கு ஒரு மதிப்​பெண் குறைக்​கப்​படும். தேர்​வர்​கள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்லை என்று தேசி​யத் தேர்வு முகமை அறிவித்​துள்​ளது.

Related Link
மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
16 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau