news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 3 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

3 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா

மரகதம் குமரவேல் தலைமையில்...

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் திடீரென தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

மரகதம் குமரவேல் தலைமையில்...
மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து, தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் உடன் சந்திப்பு
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்தனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய மூவரையும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆதவ் வரவேற்றார்.

மேலும் பலமிழக்கிறதா அதிமுக?
தேர்தல் தோல்வியை அடுத்து அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் குழப்பங்கள்; கட்சி ஏற்கெனவே இரு அணியாக செயல்படும் நிலையில் 3 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். மேலும் சிலர் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம் என்றும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையை பெற திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

வேலுமணி ஆதரவாளர்கள்
இவர்கள் மூவரும் எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்து உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி உடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
தமிழ்நாடு ரத்தக்காடாகிறது - இபிஎஸ் விமர்சனம்

தமிழ்நாடு ரத்தக்காடாகிறது - இபிஎஸ் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதம்

0
1 min agoshare
நிற்காமல் சென்ற தனியார் பேருந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved