news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்
tv

Also Watch

ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்

இதுவரை 9 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம்

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஒரேநாளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அதிரடி காட்டி உள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் 'டிராப்' கலப்பு பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா, கைனன் செனாய் தங்கம் வென்றனர். இதன்மூலம் ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியலில் 9 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தமாக 56 பதக்கங்கள் வென்ற இந்தியா 9ஆம் இடத்தில் உள்ளது.

மகளிர் வில்வித்தை
ஜோதி சுரேகா வென்னம், சிக்கிதா தனிபர்த்தி, பிரத்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சீன அணியை 238-234 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த 238 புள்ளிகள் உலக சாதனைக்கு சமமானதாக கூறப்படுகிறது.

தென்கொரியாவுக்கு எதிராக...
இந்தியாவின் சிக்கிதா தனிபர்த்தி மற்றும் சாஹில் ஜாதவ் ஜோடி, தென் கொரியாவுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் பெற்றதோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் உறுதி செய்தது.

துப்பாக்கிச் சுடுதல்
தனிநபர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா, இன்று கைனன் செனாயுடன் இணைந்து 'டிராப்' கலப்பு இரட்டையர் பிரிவில் புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

9ஆவது இடத்தில் இந்தியா
இன்றைய அடுத்தடுத்த வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா 9 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.

Related Link
பலம் வாய்ந்த சீன அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம்

பலம் வாய்ந்த சீன அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஃபீனிக்ஸ் பறவைபோல் சிறகடிக்கும் நாளந்தா, கலாமின் கனவால் எழுந்த விருட்சம்

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved