news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குருவாயூர் கோயிலின் 5000 வருட வரலாற்று அதிசயங்கள்
tv

Also Watch

குருவாயூர் கோயிலின் 5000 வருட வரலாற்று அதிசயங்கள்

குரு + வாயு + ஊர் = குருவாயூர்

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

’கடவுளின் சொந்த பூமி,’ என்ற அடையாளம் கேரளத்திற்கு இருந்தாலும் அதன் ஆன்மீக அடையாளங்கள் ஐயப்பன் கோயிலும் குருவாயூர் கோயிலும் தான்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் குருவாயூர் கோயிலுக்கு, ’தென்னிந்தியாவின் துவாரகை’ என்று, ஒரு சிறப்பு பெயர் உள்ளது.

இந்தப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உள்ளது. இங்குள்ள கடவுள், மகாவிஷ்ணுவின் 8ஆவது அவதாரமான, குழந்தை கிருஷ்ணர் வடிவத்தில் இங்கு அருள் பாலிக்கிறார்.

குழந்தை கிருஷ்ணர்...

ஆனால், பார்ப்பதற்கு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை வைத்துக்கொண்டு, குட்டி கிருஷ்ணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சிலை சாதாரண கல்லால் ஆனதல்ல, பாதாள அஞ்சனக்கல் என கூறப்படும், ஒரு அரிய வகை மூலிகை கல்லால் செதுக்கப்பட்டது.

இந்த கோயிலுக்கு 5000 ஆண்டுகால வரலாறு உள்ளது. மகாபாரத போர் முடிந்து, 5000 வருடங்களுக்கு முன், கிருஷ்ணர் அவரது அவதாரங்களை முடித்து, வைகுண்டம் போகும்போது, துவாரகா நகரம் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இங்கு வழிபட்ட கிருஷ்ணரின் சிலையை அவரது சீடர் உத்தவர் மீட்கிறார். கலியுகம் துவங்கும்போது உலக மக்களைக் காப்பாற்ற இந்த சிலையை சிறப்பான ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டும் எனக்கூறி, தேவர்களின் குருவான பிருகஸ்பதி, வாயு பகவான் சேர்ந்து தென்னிந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.

குரு + வாயு + ஊர் = குருவாயூர்

அப்போது, சிவபெருமானும் பார்வதி தேவியும் இவர்களுக்கு வழிகாட்டி, இப்போது இருக்கும் குருவாயூரில் சிலையை வைக்க சொல்கின்றனர். குருவும் வாயுவும் சேர்ந்து 5000 ஆண்டுக்கு முன், இந்த ஊரில் சிலையை வைத்ததால், குரு + வாயு + ஊர் = குருவாயூர் என்று பெயர் வந்ததாம்.

இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத நோய்களெல்லாம் தீரும் என நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் நடக்கும் 4 முக்கியமான விஷயங்கள் என்னவென்றால், இந்தியாவிலேயே துலாபாரம் கொடுப்பதற்கு மிகவும் ஃபேமஸான இடம் குருவாயூர் தான். தங்களோட எடைக்கு எடை வெல்லம், பழம், காசுகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கின்றனர்.

இங்கு திருமணம் செய்து கொண்டால்...

இங்குள்ள கண்ணனுக்கு முன், திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அண்மையில், ஒரே நாளில் 416 கல்யாணம் நடந்து ’ரெக்கார்ட் பிரேக்’ செய்யப்பட்டு உள்ளது.

யானை ஓட்டப்பந்தயம்

கோயிலுக்கு அருகிலேயே, 'புன்னத்தூர் கோட்டை' என்ற ஒரு இடம் உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 35க்கும் மேற்பட்ட ஆண் யானைகளை இங்கு தான் பராமரிக்கின்றனர்.

இங்கு ஆண்டுக்கு ஒருமுறை 'யானை ஓட்டப் பந்தயம்' நடக்கிறது. அதில், ஜெயிக்கும் யானைக்கு மட்டும்தான் அந்த வருடம் முழுவதும் சாமி சிலையை தூக்கும் பாக்கியம் அளிக்கப்படுகிறது.

ஆடை கட்டுப்பாடு...

இந்த கோவிலுக்கு என்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. முதலில் ஆடைக் கட்டுப்பாடு. ஆண்கள் இந்த கோவிலுக்கு வரும் போது, வேட்டி மட்டும் தான் கட்டவேண்டும். ஜீன்ஸ், பேண்ட், டி-ஷர்ட், சட்டை, பனியன் கூட அணியக்கூடாது. வேட்டி உடன் துண்டு மட்டும் போர்த்திக் கொள்ளலாம்.

பெண்களுக்கு புடவை, தாவணி அல்லது சுடிதார், சல்வார்கமீஸ் அனுமதி உண்டு, புடவை தாவணி தவிர்த்த மற்ற உடைகளை அணியும்போது, துப்பாட்டாவில் தோள்களை முழுமையாக மறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்த கோயிலின் கருவறை மற்றும் உள் பிரகாரத்தின் உள்ளே இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போக முடியும் என்பது, இந்தக் கோயிலின் பல நூறு வருட பாரம்பரிய கட்டுப்பாடு.

தென்னிந்தியாவின் துவாரகை

புராணங்களில சொல்லப்படும் புனிதமான பின்னணி, பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு, தனித்துவமான கேரளக் கட்டடக்கலை, பாரம்பரிய வழிபாட்டு முறை என்று குருவாயூர் கோயிலின் சிறப்புகள் ஏராளம்.

அதனால் தான் கேரளாவின் முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகவும் தென்னிந்தியாவின் துவாரகை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலாகவும் குருவாயூர் திகழ்கிறது.


Related Link
தங்க மழை பொழிய வைத்த கனக துர்கை
முதலமைச்சர் விஜய் மனம்குழைய வழிபாடு

தங்க மழை பொழிய வைத்த கனக துர்கை முதலமைச்சர் விஜய் மனம்குழைய வழிபாடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிக விலைக்கு கரண்ட், எங்கு தவறு நடந்தது? நெருக்கும் சர்ச்சை, சிக்கலில் சி.டி.ஆர்.

17
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved