news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 7.8 சதவீத ஜிடிபி, ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் பொருளாதாரம் வலுவாகிறதா?
tv

Also Watch

7.8 சதவீத ஜிடிபி, ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் பொருளாதாரம் வலுவாகிறதா?

தங்கம் வாங்க கூடாதா?

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவின் GDP அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல ஆகஸ்ட் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,99,853 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. அதேசமயம், அத்தியாவசியமற்ற தங்க கொள்முதல் மற்றும் வெளிநாட்டு செலவினங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

பொருளாதார வளர்ச்சி
இதனிடையே புள்ளிவிவரங்கள் மட்டுமே பொருளாதாரத்தின் முழுமையான ஆரோக்கியத்தை நிரூபிக்காது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு என்ன காரணம்? ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் கூறுகிறார்? காங்கிரஸ் விமர்சனத்தின் பின்னணி என்ன?

எதிர்பார்ப்பை மிஞ்சிய 7.8% வளர்ச்சி, எப்படி சாத்தியமானது?
2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்–மே-ஜூன் மாதத்தில் இந்தியாவின் GDP 7.8% வளர்ச்சி பெற்றுள்ளது. பொருளாதார நிபுணர்களின் சராசரி கணிப்பான 7.1% மற்றும் ரிசர்வ் வங்கியின் 7% கணிப்பைக் காட்டிலும் இது அதிகம். முந்தைய ஜனவரி–மார்ச் காலாண்டின் வளர்ச்சி விகிதமும் திருத்தப்பட்டு 8.6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் பல காரணிகள் உள்ளன. தனிநபர் நுகர்வு 7.1% வளர்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித் துறை 9.2% வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பொருளாதாரம்...
தனியார் முதலீட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தனியார் மூலதனச் செலவு கிட்டத்தட்ட 12% உயர்ந்திருப்பது, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வெறும் அரசுச் செலவினத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனால், உலகளவில் போர், எரிபொருள் விலை உயர்வு, வர்த்தக நிச்சயமின்மை போன்ற சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு தேவையை மையமாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற வாதத்துக்கு வலு கிடைக்கிறது.

“தங்கம் வாங்க வேண்டாம்”: ஏன் இந்த வேண்டுகோள்?
GDP வளர்ச்சி 7.8% என்ற மகிழ்ச்சியான செய்திக்கு மத்தியில் பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு முக்கியமான வேண்டுகோள் கவனத்தை ஈர்த்துள்ளது. ’தேவையற்ற தங்க கொள்முதலைத் தவிர்க்க வேண்டும்; வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆடம்பரச் செலவுகளை குறைக்க வேண்டும்; நாட்டுக்குள் செலவிட வேண்டும்,’ என்பதே அவரது வேண்டுகோளின் சாரம். இது வெறுமனே தங்கம் குறித்த அறிவுரை அல்ல. இந்தியாவின் வெளிப்புறப் பொருளாதார நிலைமையுடன் இது தொடர்புடையது.

தங்கம் தொடர்பான வேண்டுகோள்
இந்தியா தனது தங்கத்தின் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கும்போது, அதற்கான பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது. அதேபோல், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் திருமணங்கள் போன்றவை இந்தியர்களின் வெளிநாட்டு செலவினத்தை அதிகரிக்கின்றன. எனவே, “உள்நாட்டில் உற்பத்தி செய்; உள்நாட்டில் செலவு செய்; தேவையற்ற இறக்குமதியை குறை” என்ற பொருளாதார தேசியவாதக் கருத்தின் ஒரு பகுதியாகவே மோடியின் தங்கம் தொடர்பான வேண்டுகோளை பார்க்க முடியும்.

ரூ.2 லட்சம் கோடியை நெருங்கிய ஜிஎஸ்டி வசூல்
ஆகஸ்ட் 2026-ல் மொத்த GST வசூல் ரூ.1,99,853 கோடி. இது கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது 14.8% அதிகம். இதில் உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து கிடைத்த மொத்த GST வருவாய் ரூ.1,37,249 கோடி; இறக்குமதி மூலம் கிடைத்த GST ரூ.62,604 கோடி. உள்நாட்டு வருவாய் 9.3% வளர்ந்த நிலையில், இறக்குமதி சார்ந்த GST வருவாய் 29% உயர்ந்துள்ளது.

எங்கிருந்து வருகிறது?
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. GST வசூல் உயர்வை உள்நாட்டு பொருளாதாரத்தின் வலிமைக்கான சான்றாக அரசு முன்வைக்க முடியும். ஆனால் இறக்குமதி மூலம் கிடைக்கும் GST வருவாய் மிக வேகமாக உயர்ந்திருப்பது, இந்தியாவின் இறக்குமதி சார்பையும் நினைவூட்டுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.31,795 கோடி GST ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. ரீஃபண்ட் கழித்த பிறகு நிகர GST வருவாய் ரூ.1,68,057 கோடியாக இருந்தது; இது ஆண்டுக்கு ஆண்டு 8.3% வளர்ச்சி. எனவே, “ரூ.2 லட்சம் கோடி GST” என்பதை மட்டும் பார்த்தால் போதாது. அந்த வசூல் எங்கிருந்து வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

காங்கிரஸின் கேள்வி: வளர்ச்சி யாருக்காக?
GDP வளர்ச்சி என்பது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் பலன் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பதை GDP எண்கள் நமக்குத் தெரிவிப்பதில்லை. ஒரு பொருளாதாரம் 7.8% வளரலாம். அதே நேரத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் இருக்கலாம். நிறுவனங்களின் லாபம் உயரலாம்; ஆனால் ஊதிய வளர்ச்சி அதே வேகத்தில் இல்லாமல் இருக்கலாம். நகர்ப்புற நுகர்வு வலுவாக இருக்கலாம்; கிராமப்புற வருமானம் பலவீனமாக இருக்கலாம்.

புள்ளிவிவர ஜிம்னாஸ்டிக்ஸ்
இந்த பின்னணியில், 7.8% GDP வளர்ச்சியை மோடி அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளுக்கான வெற்றியாக முன்வைக்கிறது. ஆனால் இதை புள்ளிவிவர ஜிம்னாஸ்டிக்ஸ் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த 7.8% வளர்ச்சியால் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் MSME துறைக்கும் என்ன கிடைத்தது? என்றும் எதிர்க்கட்சி வினவியுள்ளது. எனவே இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான சவால் வளர்ச்சியை உருவாக்குவது மட்டும் அல்ல; அந்த வளர்ச்சியை நீடிக்கச் செய்வதும், இறக்குமதி சார்பைக் குறைப்பதும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதும், அதன் பலனை பரவலாகப் பகிர்வதும்தான்.


Related Link
’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்

’தேவையின்றி தங்கம் வாங்காதீர்’ என பிரதமர் மோடி வேண்டுகோள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் ஊழியர்கள் 157 பேர் சஸ்பெண்ட்

15
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved