news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆ.ராசா மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
tv

Also Watch

ஆ.ராசா மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

முதல்வர், அமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆ.ராசா மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

காவல்துறை தன்மீது பதிவு செய்துள்ள வழக்குகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஏழு பிரிவுகளில்...
சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரை இழிவுபடுத்தி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் கடந்த 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான, ஆ.ராசா, அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோரே கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து உரை நிகழ்த்தி இருந்தார்.

காவல்நிலையத்தில் புகார்...
குறிப்பாக, அமைச்சர் நிர்மல் குமாரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் பேசிய திமுக துணை பொது செயலாளர் எம்பி ராசா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளக் கூறி வழக்கறிஞர் கார்த்தி என்பவர் சைதாப்பேட்டை காவல்நிலையில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அமைச்சர் நிர்மல் குமாரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் பேசியதாக கூறி, ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரியிருந்தார்.

ஏற்கனவே வழக்கு
இந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக கூறி, திமுக துணை பொதுச்செயலாளர் எம் பி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
தலைமைச் செயலாளரை மாற்ற துடிக்கும் பவர் சென்டர்

தலைமைச் செயலாளரை மாற்ற துடிக்கும் பவர் சென்டர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைமா விருதை வென்ற பாக்கியஸ்ரீ போர்ஸ்

31
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved