Also Watch
Read this
முதல்வர் செக்யூரிட்டியில இருக்கற ஒரு போலீஸ் அதிகாரியையும், தமிழக அரசோட தலைமைச் செயலாளரையும் மாத்துற முயற்சிகள்ல சி.எம்.க்கு நெருக்கமா இருக்கற ஒரு பவர் சென்டர் முழு மூச்சா களம் இறங்கியிருக்காம்.

அரசாங்க ரீதியாவும், அரசியல் ரீதியாவும் முதல்வர் விஜய் எடுக்கற பல முடிவுகளுக்கு ஒப்பீனியன் மேக்கர்ஸா ரெண்டு பேர் இருக்கறதா சொல்லப்படுது, அதுல ஒருத்தர் முதல்வருக்கு பக்கத்துலேயே இருக்கற ஒரு ஐபிஎஸ் அதிகாரி, இன்னொருத்தர் தலைமைச் செயலாளர் சாய்குமாராம்.

முதல்வரோட ஆலோசகர்களா இருக்கறவங்களும், தவெகவோட வியூக அமைப்புல இருக்கறவங்களும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு வர்ற பல விவகாரங்கள்ல முடிவெடுக்கறதுக்கு முன்னால இந்த ரெண்டு பேருகிட்ட முதல்வர் டிஸ்கஸ் செய்றாராம். இது சி.எம்க்கு க்ளோஸ் சர்க்கிள்ல இருக்கறவங்களுக்கு பிடிக்கலையாம்.

இதனால அந்த ரெண்டு அதிகாரிகளையும் மாத்துற முயற்சிகளை ஆட்சி மேல்மட்டத்துல இருக்கற சிலர் எடுத்துக்கிட்டிருக்காங்களாம். தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பதிலா, டெல்லி சர்வீஸ்ல இருக்கற ஒரு மூத்த தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகிட்ட ’நீங்க தமிழகப் பணிக்கு வர விரும்புறீங்களா?’ன்னு தவெகவோட ஒரு மூத்த அமைச்சரே பேசுனாராம். ஆனா, அந்த அமைச்சர் பேசுன விதத்துல அதிருப்தி அடைஞ்ச அந்த அதிகாரி, வரலைன்னு பட்டென்னு போனை வெச்சுட்டாராம்.

இப்போ இங்க இருக்கற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்ல தங்களுக்கு சாதகமான ஒருத்தரை தலைமைச் செயலாளரா நியமிக்க முடிவெடுத்திருக்காம் அந்த பவர் சென்டர். தேர்தல் ஆணையத்தால நியமிக்கப்பட்ட சாய்குமாரோட பதவிக்காலம் அடுத்த வருஷம் பிப்ரவரி மாசம் நிறைவடையுது,

அதுக்குள்ள அவரையும், முதல்வருக்கு பக்கத்துல இருக்கற ஒரு ஐபிஎஸ் ஆபீஸரையும் மாத்துற வேலைகள் வேகமெடுத்திருக்காம். குறிப்பா, சாய்குமாரோட ஒரு சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிச்சும் அவரை விமர்சிச்சும் தவெக கூட்டணி கட்சிகளே அறிக்கை விடுற அளவுக்கு அந்த பவர் சென்டர் செயல்பட்டுக்கிட்டிருக்காம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved