Also Watch
Read this
பஸ் கட்டண உயர்வு, புது ரூட்டுக்கான ப்ர்மிட்டுக்காக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பா, ஒரு பெரும் தொகையை போக்குவரத்து துறைக்கு பொறுப்பானவருகிட்ட கொடுக்கப்பட்டிருக்காம். துறையோட ஃபைலையே ஒரு அரசுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்மணி தான் ஃபைனல் பண்றாங்களாம்.

மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுக்க இருந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இடம் பெற்றிருக்கற பல சங்கங்கள் சார்பா கோடிகள்ல பெரும் தொகை போக்குவரத்து துறைக்கு பொறுப்பானவர்கிட்ட கொடுக்கப்பட்டிருக்காம். தனியார் பஸ் கட்டண உயர்வு, புது ரூட்களுக்கு பர்மிட் இன்னும் சில சலுகைகளை எதிர்பார்த்து அந்த தொகை கொடுக்கப்பட்டிருக்காம்.

இதே துறையோட ஃபைல்கள் மீதான முக்கிய முடிவுகளை துறைக்கு பொறுப்பனவரு எடுக்காம, அவருக்கு துணையான பெண்மணி துறைக்கு பொறுப்பானவரோட சேம்பர்ல உட்கார்ந்து ஃபைல்களை ஃபைனல் செய்றாங்களாம்.

இந்தத் துறையோட அதிகாரிகள் இந்த விவகாரங்களையெல்லாம் ஆட்சித் தலைமையோட கவனத்துக்கு ஆதாரங்களோட கொண்டு போக முடிவு செஞ்சிருக்கறதுதான் கோட்டை வட்டாரத்தோட ஹாட் டாபிக்கா இருக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved