Also Watch
Read this

அன்று கையில் இருந்த 6 மாத குழந்தை தான் இன்று, கால்பந்தாட்டத்தின் GOAT, ஹிட் மேன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸியை எதிர்த்து பிஃபா போட்டியில் விளையாட போகிறது.

வைரலான புகைப்படம்
ஒட்டுமொத்த இணையத்தையும் தன் பக்கம் ஈர்த்த அந்த ஃபோட்டோ திடீரென வைரலானது ஏன்? கால்பந்து விளையாட்டின் ஆளுமையும், எதிர்கால இளம் தலைமுறையும் மோதிக் கொள்ளும் அந்த நொடிக்காக காத்திருக்கும் ரசிகர்கள், வைரலாக்கி வருகின்றனர்.

39 vs 19
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விறுவிறுப்பாகவும், நொடிக்கு நொடி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ள கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டியில், கால்பந்தாட்டத்தின் பலமிக்க அர்ஜெண்டினா அணியும், ஸ்பெயின் அணியும் மோதப் போகிறது. இந்த போட்டியின் முக்கிய ஹைலைட்டே மெஸ்ஸியும், யாமலும் தான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 39 வயதான மெஸ்ஸியை 19 வயதே ஆன யாமல் எதிர்த்து விளையாடுவது தான்.

கைக்குழந்தையுடன் மெஸ்சி
கால்பந்தாட்டத்தில், உள்ளூர் போட்டியில் இருந்து உலக கோப்பை ஆட்டம் வரைக்கும் 20 வருடமாக விளையாடி, பல கோல்கள் அடித்து ஹிட் மேன் கிங் ஆக இருப்பவர் லினோனல் மெஸ்ஸி. உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களால் கால் பந்தாட்டத்தின் காட் ஃபாதராக கொண்டாடப்படும் மெஸ்ஸி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இப்போது வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

காலண்டருக்காக...
2007ல் இளம் வீரராக இருந்த மெஸ்ஸி, கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரராக ஜொலித்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது UNICEF காலண்டருக்காக கை குழந்தையோட மெஸ்ஸி இருக்கும் ஃபோட்டோஷூட் எடுக்கப்பட்டது. குழந்தையை குளிக்க வைத்து, அதனுடன் கொஞ்சி விளையாடும் மெஸ்ஸியின் அந்த புகைப்படங்களை யாமலின் தந்தை இப்போது பகிர்ந்து உள்ளார்.

அந்த கைக்குழந்தை தான்...
19 ஆண்டுக்கு முன், மெஸ்ஸி கையில் இருந்த அந்த கைக்குழந்தை தான் இப்போது, அர்ஜெண்டினாவுக்கு எதிராக விளையாடும் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரரான யாமல். அப்போது 6 மாத குழந்தையாக, மெஸ்ஸியோட கையில் தவழ்ந்த யாமல், தற்போது கால்பந்தாட்ட மைதானத்தில், மெஸ்ஸியை எதிர்த்து விளையாட உள்ளார்.

கால்பந்தாட்ட இளம் வீரர்
17 வயதில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் யாமல், பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் அணியில் முன்னணி வீரராக விளையாடி வருகிறார்.

குறிப்பாக, 2024ல், யூரோ கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றிய போது, முக்கிய பங்கு வகித்தவர் யாமல் தான். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடித்த யாமல் Lamine Yamal, இளம் கால்பந்தாட்ட வீரருக்கான விருதையும் வாங்கி உள்ளார்.

மெஸ்சி vs யாமல்
தற்போது ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் யாமல், ஃபிபா இறுதி போட்டியில், மெஸ்ஸியை எதிர்த்து விளையாட ஆசைப்படுவதாக ஒரு முறை பேசியிருந்தார். பேசின மாதிரியே இப்போது ஃபிஃபா இறுதி போட்டியில் மெஸ்ஸியை எதிர்த்து விளையாட போகிறார் யாமல்.

கால்பந்தாட்டத்தில், பல கோல்கள் அடித்து கிங் மேக்கராக இருக்கும் மெஸ்ஸியை, அவர் கையில் தவழ்ந்த யாமல் எதிர்க்கப் போவதால், யாரு யாரை ஜெயிக்க போகின்றனர் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறி உள்ளது.