news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்’ கார்டுடன் ஜனநாயகன்
tv

Also Watch

tv

Read this

‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்’ கார்டுடன் ஜனநாயகன்

புதிய போஸ்டரை வெளியிட்டார் விஜய்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படம் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு, முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

புதிய டிரெய்லரும்...
நடிகர் விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் பணி நிறைவடைந்து உள்ளது. படத்தோட ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடம் 20 விநாடிகள் ஆக இருந்த நிலையில், CBFC தரப்பில் வெறும் 9 விநாடிகள் மட்டும் நீக்கி உள்ளனர்.

இதனால், படத்தின் இறுதி ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடம் 11 விநாடிகள் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறுதிக்கட்ட புரொமோஷனின் ஒரு பகுதியாக, படக்குழுவினர் மேலும் ஒரு புதிய டிரெய்லர் மற்றும் ஒரு பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வருவதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார் முதலமைச்சர் விஜய். சாட்டையுடன் நிற்கும் போஸ்டரில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் கார்டு இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தனுஷ் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கும் 'OM' திரைப்படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் நஸீருதீன் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது பாலிவுட் நட்சத்திரம் இணைந்த செய்தி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெளியானது தமன்னா படத்தின் ரிலீஸ் தேதி
இயக்குநர் தீபக் குமார் மிஷ்ரா இயக்கத்தில் தமன்னா, சித்தார்த் மல்ஹோத்ரா, சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனுப் சோனி உள்ளிட்டோர் நடித்துள்ள "தி விவான்" என்ற பாலிவுட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல், தமன்னா ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
175ஆவது படத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வா?

175ஆவது படத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொருளாதார பேரழிவுக்கு சுழிபோடும் டிரம்ப், சரக்கு கப்பல்களை தாக்கிய பின்னணி

13
23 mins agoshare
பொருளாதார பேரழிவுக்கு சுழிபோடும் டிரம்ப்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau