news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 175ஆவது படத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வா?
tv

Also Watch

tv

Read this

175ஆவது படத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வா?

வெறும் 49 நாட்களில் இப்படியா?

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் VJ சித்து இயக்கத்தில் உருவாகி வரும் 'டயங்கரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 49 நாளில் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் டிரெய்லர்
முழுக்க முழுக்க ரசிகர்களை கவரும் கமர்ஷியல் பொழுதுபோக்குடன் உருவாகி வரும் டயங்கரம் திரைப்படம், படக்குழுவினரின் எதிர்பார்ப்பை தாண்டி சிறப்பாக வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

175ஆவது படத்துடன் ரஜினிகாந்த் ஓய்வா?
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் அவரது 173ஆவது படம். தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணையும் புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படம் அவருக்கு 174ஆவது படம். இந்த நிலையில், 175ஆவது திரைப்படத்தை தனது திரைப் பயணத்தின் நிறைவு படமாக மாற்ற ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஓய்வு தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

துல்கர் சல்மானின் அடுத்த படம்
இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி, இந்த படத்துக்கு "ஸ்ரீ ஸ்ரீ" என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படம் துல்கர் சல்மானின் 41ஆவது திரைப்படம். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. "ஸ்ரீ ஸ்ரீ" படத்தை இந்தாண்டே படக்குழு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Link
நடிகை தமன்னா நடித்துள்ள  பாலிவுட் திரைப்படம்

நடிகை தமன்னா நடித்துள்ள பாலிவுட் திரைப்படம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்’ கார்டுடன் ஜனநாயகன்

6
24 mins agoshare
புதிய போஸ்டரை வெளியிட்டார் விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau