Also Watch
Read this

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அபிராமி, வயது என்பது வெறும் எண் மட்டும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.

Spidey Challenge வீடியோ வைரல்
தனது சமூக வலை தள பக்கத்தில், அபிராமி பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அபிராமி பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஸ்பைடர்மேன் போல சுவரில் தலைகீழாக பேலன்ஸ் செய்து நிற்கும் சவாலை அசால்ட்டாக செய்து காட்டி உள்ளார்.

இரண்டு கால்களையும், ஒரு கையையும் சுவற்றில் ஊன்றிக்கொண்டு, ஒரே ஒரு கையை மட்டும் தரையில் வைத்து உடலை முழுவதுமாக பேலன்ஸ் செய்யும் அந்த போஸ், காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த போஸை எப்படி செய்தார் என்பதையும் வீடியோவில் அபிராமி அழகாக காட்டி உள்ளார். "Just HAD to do the Spidey Challenge" என்றும் அபிராமி பதிவிட்டுள்ளார்.

'சுப்ரமணியபுரம்' பட நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு திருமணம்
நடிகை சுவாதி, தனது 'மந்த் ஆஃப் மது' பட இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடியை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவர் தனது திருமணப் படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, "திருமணமாகி விட்டது" என ஒரே வார்த்தையில் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ளது. கடந்த 2023ல் வெளியான 'மந்த் ஆஃப் மது' படம் மூலம் சுவாதி மீண்டும் நடிக்க வந்தார். இதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடி. இந்த படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்து உள்ளது. முன்னதாக சுவாதி, 2018ல் மலையாள பைலட் விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2022ல் அவரை விவாகரத்து செய்தார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து கணவரின் படங்களை நீக்கியபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

பாடகியாக அறிமுகமாகும் மாதவி
வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே அடையாளம் பெற்ற கலைஞர் மாதவி 'வேட்ட சாமி' படத்தின் மூலம் சினிமாவில், பின்னணி பாடகியாக அறிமுகமாகிறார்
அருள்நிதி - அமீர் நடிப்பில் ஜிப்ரான் இசையமைக்கும் 'வேட்ட சாமி' படத்தில் மாதவி 'சுடலைமாடன் வேட்டை' என்ற பாடலை பாடி உள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசைக்கான பணி நடைபெற்று வரும் நிலையில், 'வேட்ட சாமி' படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடகியாக அறிமுகமாவதை இசையமைப்பாளர் ஜிப்ரான், தனது சமூக வலைதளப் பக்கத்தில், மகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார். நம்முடைய மண் சார்ந்த இசையில், இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.