தடயவியல் நோயியல் நிபுணர் : இளம் சிறார் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் இருந்த எப்ஸ்டீன் இறந்து கிடந்தார். இந்நிலையில், எப்ஸ்டீனின் குடும்பத்தினரின் சார்பாக அவரது பிரேத பரிசோதனையை கவனித்த தடயவியல் நோயியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் பேடன், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பெரும்பாலும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருக்கலாம், தற்கொலை செய்து கொண்டது போல் தெரியவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். எப்ஸ்டீனின் கழுத்து எலும்பு முறிவுகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை மேற்கோள் காட்டி, அவர் மீண்டும் விசாரணை நடத்த கூறியுள்ளார். Related Link போதைப் பொருள் கடத்தியதாக படகை தாக்கி அழித்த அமெரிக்கா