தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் டிட்வா புயல் உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு.இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் 30ஆம் தேதி அதிகாலை வட தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்பு.புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு.மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும் டிட்வா புயல்.சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு.