news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"
tv

Also Watch

tv

Read this

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

விஜய் கண்டிக்க வேண்டும்

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் ரஜினிகாந்தை பற்றி, ஆதவ் அர்ஜுனா தவறாகப் பேசியதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். ரஜினிகாந்தை பற்றி தவறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவை, விஜய் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சிறந்த ஆன்மிகவாதி
இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பரப்பும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம். திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர். தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்ற ரஜினிகாந்த், திரைத்துறையின் இமயத்தை தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

ஆதவ், மன்னிப்பு கேட்க வேண்டும்
அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமர் மோடியிடம் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்து தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர். இத்தகைய சிறந்த பண்பாளரை, தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொது வெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல. அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.

விஜய் கண்டிக்க வேண்டும்
தமிழக மக்களின் பேரன்பிற்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிக்க விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

Related Link

"திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது"

           



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
10 hrs 14 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved