news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு

"குக்கர்" என திரைப்படத்திற்கு தலைப்பு

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு

நடிகர் தனுஷ் - 55 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

வில்லனாக மம்மூட்டி...
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷின் வொன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும், நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜை வெளியீடாக திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கரு.பழனியப்பன் இயக்கும் புதிய திரைப்படம்
கரு.பழனியப்பன் இயக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். "குக்கர்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், காளி வெங்கட் நடிப்பதாகவும், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு திரைப்படம் இயக்காமல் இருந்த கரு.பழனியப்பன், பல படங்களில் நடித்து வந்ததோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

ஜூன் 19ஆம் திரையரங்குகளில் வெளியாகும்
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள "நூறு சாமி" திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், நடிகர் அஜய் திஷான் பாஸ்கர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இயக்குநர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில், விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'இஷ்க்நாமா' பாலிவுட் படத்தின் டீசர் வெளியீடு
நடிகை ஷெஹ்னாஸ் கில் (Shehnaaz Gill) மற்றும் ஜே ரந்தாவா (Jayy Randhawa) நடிப்பில், அரவிந்தர் எஸ்.கைரா (Arvvindr S khaira) இயக்கத்தில் உருவாகி வரும் "இஷ்க்நாமா" (Ishqnama) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பின்னணியில் காதல், பிரிவு, தியாகம் மற்றும் வலியை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம், வரும் ஜூலை 24ஆம் தேதியன்று உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
சர்ச்சை மன்னன் நாஞ்சில் விஜயன், அதற்குள் அடுத்த புகார்?

சர்ச்சை மன்னன் நாஞ்சில் விஜயன், அதற்குள் அடுத்த புகார்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

3
8 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved