Also Watch
Read this

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில்...
’பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசப்பட்ட தனது கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு, நடிகர் விஜய் சேதுபதியின் விளக்கம் அளித்துள்ளது போன்ற புரோமோ வெளியாகி உள்ளது. அதில், “இந்த பிக் பாஸ் மேடையில் எனது கருத்து அனைத்தும், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் எனக்கும் மட்டுமே உரியது; இந்த கருத்து வெளியில் இருக்கும் எந்த ஒரு தனி நபரையும் அல்லது எந்த ஒரு அமைப்பையும் சார்ந்து குறிப்பிடப்பட்டவை அல்ல,” என்று விஜய்சேதுபதி பேசி உள்ளார்.

ஆஸ்கர் ரேஸில் இசைஞானி படம்
இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ள இலங்கைத் தமிழ்த் திரைப்படமான, ‘அந்தோனி’ 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கயல் வின்சன்ட், பானு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் ஆகும்.

எனக்கு அம்மா ஆகணும்
நடிகை ஸ்ருதிஹாசன், சோஹா அலி கான் தொகுத்து வழங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது உடல்நலம், மாதவிடாய் கால வலி மற்றும் தாய்மை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, ’எனக்கு தாயாக வேண்டும் என மிகவும் ஆசை; நான் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தத்தெடுக்க தயாராக இருக்கிறேன்

எனக்கு PCOS இருப்பதால் மாதவிடாய் நாட்களில் மிகுந்த வலி இருக்கும். ஒருவேளை ஆண்களுக்கும் மாதவிடாய் வலி வந்தால்தான் பணியிடங்களில் இதற்கும் அதிகாரப்பூர்வமாக விடுமுறை கிடைக்குமோ என எப்போதும் யோசிப்பேன்,’ என்று நெகிழ்ச்சியுன் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved