news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் சேதுபதிக்கு போன் செய்த முதல்வர் விஜய்
tv

Also Watch

விஜய் சேதுபதிக்கு போன் செய்த முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் இனிமையான, அன்பான மனிதர்

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரஜினிகாந்த் மாதிரி அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகராக வேண்டும் என்பதே வாழ்நாள் ஆசை என்று, ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட விஜய் சேதுபதி நெகிழ்ச்சி தெரிவித்தார்.

விஜய்சேதுபதி நடிக்கும் ’பத்தா
'பத்தா' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது;
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரைப் பார்த்து நான் மிகவும் வியந்தும், பிரமித்தும் போனேன். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்தேன். அதில் ஒரே ஒரு காட்சிதான். ஒரு சிறிய ஷாட், என்னுடன் ஒரு உரையாடல் காட்சி.

அந்தக் காட்சிக்காக நெல்சன் வெற்றிலை, பாக்கு, கிராம்பு ஆகியவற்றை வைத்திருந்தார். ரஜினிகாந்த் சாருக்கு எந்தவிதமான ரிகர்சலும் தேவையில்லை. ஆனால், என்னுடன் பேசிக்கொண்டே கிராம்பை எடுத்து வாயில் போட்டு, வெற்றிலையை மடித்து என, அனைத்தையும் இயல்பாகச் செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்திலும் என்னுடன் உரையாடியபடியே டைமிங் சரியாக இருக்கிறதா? என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ரஜினிகாந்த் போல...
அவருடைய நடிப்பையும், அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்து நான் அசந்து விட்டேன். அவரைப் போல ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகராக வேண்டும் என்பதே என்னுடைய வாழ்நாள் ஆசை

அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்
சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தேன். விஜய் சார் என்னை அழைத்து, 'நண்பா, ரொம்ப நன்றி, அவன் சந்தோஷமா இருந்தான்,' என்றார். நான் சஞ்சயிடமே ’உங்க வீட்டில் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இருக்கும்போது, என்னை பிடிக்குமா? என கேட்டிருக்கிறேன். முதல்வர் விஜய் இனிமையான மற்றும் அன்பான மனிதர்.

சஞ்சய் ரொம்ப தங்கமான பையன். அவனுடைய படமும் இந்த படத்தோட வருது. அவன் Shoot பண்ணும்போது நான் Set-க்கு போயிருந்தேன்.

எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் ரொம்ப Cute Fellow. சஞ்சயோட One Hour இருந்திருப்பேன்னு நினைக்கிறேன். Set இருந்து பார்த்துட்டு, மகிழ்ச்சியா நான் வந்துட்டேன்.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.


Related Link
விஜயை Direct Attack செய்த சேதுபதி? விளக்கம் கொடுத்த சேனல் நிர்வாகம்

விஜயை Direct Attack செய்த சேதுபதி? விளக்கம் கொடுத்த சேனல் நிர்வாகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைநகரில் தள்ளாடும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved