news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முதலமைச்சர் விஜய் வசம் 16 துறைகள் ஒதுக்கீடு
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் விஜய் வசம் 16 துறைகள் ஒதுக்கீடு

அருண்ராஜ்-சுகாதாரம், செங்கோட்டையன்-நிதி

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அரசில், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முதல்வராக விஜய் பதவி ஏற்பு
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த மே 10ஆம் தேதி பதவி ஏற்றனர். இந்த நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் இன்று மே 16ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

முதல்வர் விஜய் வசம் 16 துறைகள்
தமிழ்நாடு அமைச்சரவையில், முதலமைச்சர் விஜய் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளும் முதலமைச்சர் விஜய் வசமே உள்ளன.

நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தவெக அரசில், கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து எம்எல்ஏவாக தேர்வான அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக முக்கியமான நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நீர்வளத்துறை - ஆனந்த்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவைகளும் இதில் உள்ளன.

விளையாட்டு - ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி - கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

சுகாதார அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன்
சென்னை மயிலாப்பூரில் இருந்து தவெக எம்எல்ஏவாக தேர்வான அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை - நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை எழும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து தேர்வான அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும்
அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு
அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கு பெண் அமைச்சர்
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

Related Link
அதிமுகவை விழுங்கும் தவெக, கணிக்க தவறிய EPS?

அதிமுகவை விழுங்கும் தவெக, கணிக்க தவறிய EPS?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சந்தையில் வெள்ளிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து

0
35 mins agoshare
நொய்டா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved