தெலங்கானா... சுவாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் இருந்து வெளியே வந்த ஜோடியை, சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர். நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த இருவர். தப்பிஓட முயற்சித்தவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இளம்பெண்ணையும், இளைஞரையும் கத்தியால் குத்திய நபர் யார்? அவரது கொலைவெறிக்கு காரணம் என்ன?தெலங்கனாவுல உள்ள ஐதராபாத் மஹாராஜ் கஞ்ச் பகுதிய சேர்ந்த ரவி - பூஜா தம்பதிக்கு 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்த ரவி, மனைவிய நல்லபடியா பாத்துக்கிட்டாரு. சம்பாதிக்குற பணத்த கூட மனைவி கையில தான் கொடுப்பாரு. கணவன், மனைவி மேல ரொம்ப பாசமா இருந்துருக்காரு. ஆனா மனைவி பூஜாவுக்கு, அதே ஏரியாவ சேந்த அமித் சிங்-ங்குற இளைஞர் கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. அந்த பழக்கமே அவங்களுக்குள்ள கள்ளக்காதலாகவும் மாறிருக்கு. கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் பீச், பார்க், ஓட்டல்ன்னு ஊர் சுத்திருக்காங்க. அமித் சிங் டெய்லி பூஜாவோட வீட்டுக்கு போய்ட்டு அடிக்கடி அவங்க கூட தனிமையிலையும் இருந்துருக்காரு.இத நோட் பண்ணிட்டே இருந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, பூஜாவோட நடவடிக்கைய பத்தி ரவி கிட்ட சொல்லிருக்காங்க. இத கேட்டு அதிர்ச்சியடைஞ்ச ரவி, மனைவி மேல சந்தேகப்பட்டு, அவங்கள கண்காணிக்க ஆரம்பிச்சுருக்காரு. மனைவி தூங்குனதுக்கு அப்புறம், அவங்களோட செல்போன எடுத்து வாட்ஸ் அப், இன்ஸ்டான்னு எல்லாத்தையும் செக் பண்ணிருக்காரு. அதுல மனைவி, அமித்-ங்குற இளைஞர் கூட ஆபாச பேசியிருந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச ரவி, மனைவி கிட்ட இதபத்தி கேட்டு அவங்கள சரமாரியா தாக்கிருக்காரு. நான் உன்ன நல்லபடியா தான பாத்துக்கிட்டேன், ஆனா உன் புத்தி ஏன் இப்படி போச்சு, இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை, இதுக்கப்புறமும் நீ அமித் கூட பழகுனனா உன்ன உயிரோட விட்டு வைக்க மாட்டேன்னு மிரட்டிருக்காரு. ஆனா அத எதையும் காதுல வாங்காத பூஜா, அமித் கூட தொடர்ந்து பழகிட்டு இருந்துருக்காங்க.குடும்ப மானம் போய்றக்கூடாதுன்னு நினைச்சு ரவியும், பலமுறை மனைவிக்கு அட்வைஸ் பண்ணி பாத்துருக்காரு. ஆனா பூஜா திருந்துற மாதிரி தெரியல. அதே மாதிரி அமித்துக்கும் ஃபோன் பண்ணி மிரட்டிப் பாத்துருக்காரு. அமித்தும் ரவியோட பேச்ச கேட்குற மாதிரி இல்ல. இதனால கொலை வெறியான ரவி ரெண்டு பேரையும் கொலை பண்ண முடிவு பண்ணிருக்காரு. சம்பவத்தன்னைக்கு அமித்தும் பூஜாவும் பைக்ல பக்கத்துல உள்ள கோயிலுக்கு போய்ருக்காங்க. இத தெரிஞ்சுக்கிட்ட ரவி, ரெண்டு பேரையும் பின் தொடர்ந்து போய், அந்த கோயிலுக்கு முன்னாடி உள்ள ஒரு இடத்துல ஒழிஞ்சு நின்னுருக்காரு. அந்த நேரத்துல சுவாமி கும்பிட்டுட்டு அமித்தும், பூஜாவும் வெளியில வந்துருக்காங்க. அப்ப மின்னல வேகத்துல ஓடிவந்த ரவி மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து ரெண்டு பேரையும் கண்மூடித்தமா குத்திருக்காரு. இதுல அமித்சிங் உயிரிழந்துட்டாரு. பூஜா ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல தீவிர சிகிச்சை பிரிவுல அட்மிட் ஆகிருக்காங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்டபோலீஸ் ரவிய அரெஸ்ட் பண்ணி சிறையில் அடைச்சுட்டாங்க.