வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருசக்கர வாகனம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.ஜாப்ரப்பேட்டை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பால். இவர் இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் வந்து பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகன காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அவர் அருகிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் வாகனத்தை தள்ளி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஜான்பால் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.