பொங்கல் பண்டிகையின் துவக்கமான போகி பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும்... புதியன புகுதலும்... என்ற நோக்கத்துடன் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீட்டில் இருந்த பழைய பொருட்கள் மற்றும் துணிகளை, வீட்டின் முன்பு போட்டு மக்கள் எரித்தனர்.