Also Watch
Read this
By: Web Team

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. நிறைப்புத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து, ஏராளமான பக்தர்கள் நெற்கதிர்களை அதிகளவில் கொண்டு வந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கொண்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை மீண்டும் அடைக்கப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved