Also Watch
Read this
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அன்புமணி உடன் நேரில் சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் விஜய், தமிழக முதல்வராக மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். இன்று சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

குடும்பத்தினருடன் வந்து வரவேற்பு
பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க நீலாங்கரை இல்லத்துக்கு வந்த முதலமைச்சர் விஜய்யை, வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து அன்புமணி வரவேற்றார். இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் வரவேற்று உபசரித்தார். அன்புமணிக்கு முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

குடும்பத்துடன் புகைப்படம்
தொடர்ந்து, முதல்வர் விஜய் மற்றும் அன்புமணி சிறிது நேரம் உரையாடினார். பின்னர், அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் விஜய் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.