news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தம்பி விஜய் தலைமையிலான தவெகவுக்கு வாழ்த்துக்கள் - சீமான்
tv

Also Watch

tv

Read this

தம்பி விஜய் தலைமையிலான தவெகவுக்கு வாழ்த்துக்கள் - சீமான்

பொறுப்புள்ள எதிர்க்கட்சி

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து கூறி உள்ளார்.

புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்
இதுதொடர்பாக, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி
தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
இவ்வாறு சீமான் தமது பதிவில் கூறி உள்ளார்.

நான்கு முனைப்போட்டி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவியது. ஆளுங்கட்சியான திமுகவை பின்னுக்கு தள்ளி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றியை பெற்றது. தேர்தல் களத்தில் 15 ஆண்டுகளாக நிற்கக்கூடிய நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் சீமான் காரைக்குடி தொகுதி டெபாசிட்டை இழந்தார். இந்நிலையில், விஜய் மற்றும் தவெகவினருக்கு வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டுள்ளார்.


Related Link
தவெக சட்டமன்ற கட்சித் தலைவராக விஜய் ஒரு மனதாக தேர்வு

தவெக சட்டமன்ற கட்சித் தலைவராக விஜய் ஒரு மனதாக தேர்வு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்

5
21 mins agoshare
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved