Also Watch
Read this
தமிழ்நாட்டின் 14ஆவது முதலமைச்சராக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதவி ஏற்க உள்ளார். தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக, விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

108 இடங்களில் வெற்றி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. ஆட்சியமைக்க உரிமை கோரி, ஆளுநருக்கு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் உடன் சந்திப்பு
இன்று மே 5ஆம் தேதி, சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் சந்தித்தார்.
அப்போது, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவரான விஜய், ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

எம்எல்ஏக்களிடம் கையெழுத்து
தவெக தலைவர் விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், ஆளுநருக்கு கடிதம்
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு கடிதம் எழுதி உள்ள கடிதத்தில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறும், சட்டப்பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் தவெக தரப்பில் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved