news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு
tv

Also Watch

தவெகவுக்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலிலும் தவெகவுக்கு ஆதரவு

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பனையூர் தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜயை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

107 இடங்களில் விஜய்
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக இருக்கும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர்.

காங்கிரஸ் பொறுப்பாளர் அறிக்கை
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவை வழங்குமாறு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார். அரசியலமைப்பு கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான, மகத்தான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வழங்கி உள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

காமராஜரின் பொற்காலம்
தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இந்தத் தேர்தல் ஆணையை மதிப்பதும், அதனை நிலை நிறுத்துவதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமை. அதற்கிணங்க, தமிழக காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்களது முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளன. இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்தக் கூட்டணியில் சேர்க்காமல் தமிழக வெற்றி கழகம் விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு வழங்கப்படும். தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக காங்கிரஸுக்கும் இடையிலான இந்தக் கூட்டணி, வரும் பல பத்தாண்டுகளுக்கு தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கைகள், பி.ஆர்.அம்பேத்கரின் அரசியலமைப்பு கொள்கைகள் மீது உறுதியான பற்று, உறுதியுடன் செயல்பட்டு, பெருந்தலைவர் காமராஜரின் பொற்காலத்தை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டுவரப் பாடுபடும்.

கூட்டணி தொடரும்
இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும். ஒரு மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை அமைப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்போம் என்றும், தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக உறுதி அளிக்கின்றனர்
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved