news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பெண் நண்பரை கொ*ற கறிக்கடைக்காரர் கைது
tv

Also Watch

பெண் நண்பரை கொ*ற கறிக்கடைக்காரர் கைது

துருப்புச்சீட்டாக அமைந்த டாட்டூ, ஆடைகள்

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆந்திராவில் வளர்ப்பதற்கு கொடுத்த சிறுவனை, அழைத்து சென்றுவிடுவதாக மிரட்டி மிரட்டியே பணம் பறித்த பெண் நண்பரை கறிக்கடைக்காரர் கொ* செய்து துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை கால்வாயில் வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கறிக்கடைக்காரரும், அவரது கடையில் பணிபுரியும் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொ*க்கான பின்னணி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

திருமணம் செய்து கொள்ளாமல்...
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிவீடு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி. ஓட்டல்களில் வேலை செய்து வந்த இவருக்கு, மங்களகிரியை சேர்ந்த கவுஸ் முகைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ளாமலேயே அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதன்மூலம் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கல்யாணியிடம் இருந்து விலகிய முகைதீன், குழந்தையை தனது உறவினரான ஷஃபி என்பவரிடம் கொடுத்துவிட்டார். கறிக்கடை நடத்தி வரும் ஷஃபிக்கு ஏற்கெனவே 3 மகள்கள் இருந்தாலும் ஆண் வாரிசு இல்லாததால் முகைதீனின் குழந்தையை தன் சொந்த மகன்போன்றே பாசத்துடன் வளர்த்து வந்தார்.

அடிக்கடி பணம் கேட்டு...
தற்போது சிறுவனுக்கு 10 வயது ஆகும் நிலையில் ஷஃபியுடன் நெருங்கிப்பழகி கள்ளஉறவை ஏற்படுத்திக் கொண்ட கல்யாணி அடிக்கடி பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து உள்ளார்.

பணம் கொடுக்காவிட்டால் தனது மகனை அழைத்துச் சென்றுவிடுவேன் என மிரட்டி, மிரட்டியே பலமுறை பணத்தை கறந்த கல்யாணி, சம்பவத்தன்று ரூ.20 ஆயிரம் உடனே வேண்டும் என அடம்பிடித்ததாக தெரிகிறது. இதனால், பொறுமையிழந்த ஷஃபி, கல்யாணியை கொ* செய்ய திட்டம் தீட்டினார்.

சிசிடிவி ஆய்வு
இதன்படி, பணம் தருவதாககூறி தனது கறிக்கடைக்கு வரவழைத்த ஷஃபி கடையில் பணிபுரியும் குரவய்யாவுடன் சேர்ந்து கல்யாணியை அரிவாளால் வெட்டி பத்து துண்டுகளாக்கி அருகே உள்ள ஓடும் கால்வாயில் வீசிவிட்டார். இந்நிலையில் துண்டு துண்டாக உடல் பாகங்கள் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் அதனை மீட்டு சென்றதோடு, 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஆனால், கொ*யாளி குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஆதாரம் தந்த டாட்டூ
இதனிடையே, உடல் பாகங்களில் இருந்த ஆடைகள், கைப்பகுதியில் இருந்த டாட்டூ ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல்துறையினர் பதிவிட்டனர். அதனை பார்த்த கல்யாணியின் சகோதரர் கொ* செய்யப்பட்டது தனது சகோதரிதான் என போலீசாருக்கு தகவல் தெரிவிக்க விசாரணையை முடுக்கிவிட்டனர். கல்யாணியின் பின்புலத்தை அலசியபோதுதான் கவுஸ் முகைதீனுடன் ஏற்பட்ட பழக்கம் முதல் ஷஃபியுடன் ஏற்பட்ட பழக்கம், அதனால் நடந்த கொ* என அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது ஷஃபியும், அவரது கடை ஊழியர் குரவய்யா இருவரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Related Link
உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved