news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
tv

Also Watch

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

காலை 9 மணிக்கு தாராபுரத்தில் 17.55% வாக்குகள் பதிவு

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா மதுக்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார். காலையில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். 

தவெகவினர் கார் சிறைபிடிப்பு
இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் வீராச்சிமங்கலத்தில் வெளிமாவட்ட தவெகவினர் சுற்றுவதாக புகார் எழுந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தவெகவினர் சென்ற காரை வழிமறித்து, “கோவைக்காரர்களுக்கு தாராபுரத்தில் என்ன வேலை?” எனக் கேட்டு அதிமுகவினர் கடும் வாக்குவாதம் செய்தனர். அதிமுகவினர் தங்களை அடிக்கப் பாய்ந்ததாக கோவை மாவட்ட தவெகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். 

“சித்தரிக்கப்பட்ட வீடியோ”
தேர்தல் செலவு தொடர்பாக தான் பேசியது போன்று வீடியோ வெளியான விவகாரத்தில், வீடியோ சித்தரிக்கப்பட்டது என தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கம் அளித்துள்ளார். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்றும், அந்த வீடியோவால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் திட்டவட்டமாக கூறி உள்ளார். 

போதையில் ரகளை
தாராபுரம் தளவாய்ப்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் போதையில் பூத் சிலிப் எடுத்துவராமல் ரகளையில் ஈடுபட்ட குடிமகனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தடுத்த போலீசாருடன் குடிமகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. 

வாக்காளர்கள் கவனத்திற்கு
இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அட்டை (அ) ஆதார் (அ) PAN உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்
வாக்குச்சாவடியில் கட்சியின் சின்னம் பொறித்த ஆடை, தொப்பி, பிரச்சார பொருள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் செல்ஃபோன் எடுத்துச்செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ஃபோன்களை வைத்துவிட்டுச் செல்ல பிரத்யேக இடம் அமைக்கப்பட்டுள்ளது. 

தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கை பதிவு செய்தார்.

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார்.


Related Link
கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசிபலன் 06102026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved