news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திமுக மகளிர் அணி, Gen Z DMK Meet up, அடுத்து டான்ஸ்
tv

Also Watch

tv

Read this

திமுக மகளிர் அணி, Gen Z DMK Meet up, அடுத்து டான்ஸ்

COPY PASTEஆ? விமர்சனம் என்னாச்சு?

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இளம்தலைமுறையினரை ஈர்ப்பதில் நாங்களும் சோடை போனவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக Gen Z இளைஞர்களுக்கான சந்திப்பு கூட்டத்தை நடத்திய திமுகவினர், அடுத்த சிலநாட்களில் மகளிர் அணி கூட்டத்தை நடத்தி பெண்களை நடனப் புயலாக மாற்றி உள்ள நிலையில் இவையெல்லாம் உதயசூரியனின் உத்தி இல்லையே என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரீல்ஸ் ஆட்சி என தவெகவை வண்டி வண்டியாக விமர்சனம் செய்த திமுக, தற்போது அதேபாணியையே அவர்களும் கையில் எடுத்துள்ளதாக கூறும் அரசியல் பார்வையாளர்கள் திமுகவின் அடுத்த மூவ்வையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம்.

புலியை பார்த்து...
தேர்தல் தோல்விக்கு பிறகு, திமுகவினரின் ஒவ்வொரு அசைவும் புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டதுபோல் தெரிகிறதே? தவெக மீது வீசிய அத்தனை விமர்சன நெடியும் தற்போது திமுக பக்கமும் வீசுகிறதே? இதெல்லாம் புது ஃபார்மெட்டாக இருக்கிறதே? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

தவெக மீது திமுக விமர்சனம்
கொள்கை இல்லாத தற்குறி கூட்டம், அவர்களுக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது. பிரச்சாரக் கூட்டத்தில் ஆடிய பலரும் 13 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள்தான். அந்த சிறுவர்கள் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது. இவைகள் தான் தவெக மீது திமுக வைத்த விமர்சனம். அந்த விமர்சனத்தையெல்லாம் தாண்டி கூட்டத்தை ஓட்டாக மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தது தவெக. அதன்பிறகு, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தும், மாஸ் பிஜிஎம்முடன் கவர்ச்சிகரமான வீடியோக்களை பதிவிட்டு பப்ளிசிட்டி தேடியும், Gen Z தலைமுறையை இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தன்வசப்படுத்தியும் தவெக ஆட்சியமைத்து விட்டதாக விமர்சனம் செய்த திமுக, ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல் ரியல் ஆட்சி நடத்துங்கள் எனவும் கூற ஆரம்பித்தனர்.

தவெக பார்முலா...
இதற்கு, தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் பதிலடி கொடுத்து வருவது ஒருபக்கம் இருந்தாலும் இளம்தலைமுறையினர் வாக்குகள் திமுகவிற்கு பெருமளவு விழவில்லை, அவை தவெகவிற்கு தாவிவிட்டது என்பது உண்மைதான். அதேபோல், விஜய் பாட்டு ஒலித்ததும் தன்னையறியாமல் குஷியில் ஆடும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் விஜய் அங்கிளுக்கு ஓட்டுப்போடுங்கள் என தங்களது பெற்றோரிடம் செல்லமாக கெஞ்சி விசிலுக்கு வாக்கை பதிய வைத்தார்களாம். சிறுவர்கள் கூட்டம் நேரடியாக ஓட்டாக மாறாவிட்டாலும் மறைமுக ஓட்டாக மாறிவிட்டது. இதையெல்லாம் விமர்சனம் செய்து வந்த திமுகவினர் தற்போது தவெகவின் ஃபார்முலாவையே கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளுமே அப்படிதான் உள்ளது.



இளம் தலைமுறையினர் சந்திப்பு கூட்டம்

தேர்தல் நேரத்தில்கூட திமுக ஐடி விங் அப்படி ஒன்றும் அசாத்திய ஆக்டிவாக இல்லை. ஆனால், தவெக வெற்றி பெற்றதும் ஐடி விங் அனலாய் தங்கள் வேலையை பாய்ந்து பாய்ந்து செய்து வருகிறது. தேர்தலுக்குப்பிறகு சமூக வலைதளங்களில் திமுகவினர் படுஆக்டிவாக இருப்பதை இன்ஸ்டாவை ஸ்க்ரால் செய்தாலே பார்க்க முடியும். முன்பைவிட வீடியோக்கள் அசுரவேகத்தில் போஸ்ட் செய்யப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க, திமுகவின் ஆதரவாளர்கள் என சொல்லக்கூடிய சிலர் Gen Z திமுக என்னும் தலைப்பில் இளம் தலைமுறையினர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அதனை நடத்த பல இடங்களில் அனுமதி கேட்டும் கிடைக்காத நிலையில், அண்ணா அறிவாலயத்திலேயே நடத்துமாறு திமுக தலைமை அனுமதி கொடுத்தது.

இளம் தலைமுறையினரா?
நேரடியாக திமுக தலைமை நடத்தவில்லை, அவர்களது ஆதரவாளர்கள்தான் நடத்துகின்றனர் என்பதுபோல் இந்த கூட்டம் நடத்தப்பட்டாலும் அதில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, முன்னாள் அமைச்சரும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Gen Z இளைஞர்களை ஈர்ப்பதில் நாங்களும் சோடை போனவர்கள் அல்ல என்பதை உலகுக்கு காட்ட இந்த கூட்டம் நடத்தப்பட்டாலும் அந்த தலைமுறையினரின் தலைகள் பெரிதாக தென்படவில்லை என்பதே உத்தமம்.

ஆட்டம் போட்ட மகளிர் அணி
அதேபோல், எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் நிச்சயம் கட்டுக்கோப்பு கடைபிடிக்கப்படும் என திமுகவினர் கூறுவதுண்டு. பிரச்சாரத்தின்போதுகூட திமுகவினர் நடனம் ஆடுவதை பார்த்திருக்கலாம். ஆனால், திமுக மகளிர் அணி கூட்டத்தில் நடனத்தையெல்லாம் பெரிதாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்க, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டத்தில் பெண்கள் ஃபுல் வைபில் ஆடினர். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், ஒருநாளும் இல்லாத திருநாளாக நடன புலியாகவே மாறினர்.

இந்த நடனமும் தவெக பாணியின் காப்பி பேஸ்ட்தான் எனவும் பேச்சு அடிபடுகிறது. மொத்தத்தில், எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் உதயசூரியனின் உத்தி இது இல்லை என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் பதிலாக உள்ளது.

Related Link
கர்நாடக அரசிடம் பேசுவாரா முதல்வர்? - திமுக கேள்வி

கர்நாடக அரசிடம் பேசுவாரா முதல்வர்? - திமுக கேள்வி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீர்ந்து போன சக்தியிடமே திருடினால், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார்?

3
7 mins agoshare
தீர்ந்து போன சக்தியிடமே திருடினால், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார்?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved