news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்

"வாட்ஸ் ஆப் வதந்திகளை வாந்தி எடுப்பதா?"

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், ஜானகி எம்.ஜி.ஆரை நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் கொடுக்க அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மறுத்து விட்டதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-இன் பொய்யை வைத்து ஒரு புத்தகமே போடலாம் என்றதோடு, சங்கி கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு வாட்ஸ் ஆப் வதந்திகளை வாந்தி எடுப்பதாகவும் சாடியுள்ளார்.

ஆரணியில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பேச்சு

* MGR மனைவி ஜானகியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டோம்
* MGR நினைவிடம் அருகே ஜானகி அம்மாளை அடக்கம் செய்ய இடம் கேட்டோம்
* முதலமைச்சராக இருக்கும் போது இறந்தால் தான் இடம் என்றார் கருணாநிதி

* முன்னாள் முதலமைச்சர் ஜானகிக்கு இடம் கொடுக்க மறுத்த கருணாநிதி
* ராமாவரம் தோட்டத்தில் அடக்கம் செய்யுங்கள் எனக் கூறிய கருணாநிதி

* காமராஜரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்ட காங்கிரஸ் கட்சியினர்
*கிண்டியில் இடம் ஒதுக்கியது கருணாநிதி தலைமையிலான அரசு

*முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டும் மெரினாவில் இடம்
*மற்ற முதலமைச்சருக்கு ஒரு நியாயம்; கருணாநிதிக்கு மட்டும் வேறு நியாயமா?
* கிண்டியில் அடக்கம் செய்ய கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்தேன்

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையை மறைக்க முடியாது
* கருணாநிதி என்ன முடிவு எடுத்தாரோ அதே முடிவைதான் நானும் எடுத்தேன்


விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


* பழனிசாமியின் பொய்யை வைத்து புத்தகமே போட்டுவிடலாம்
* 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியை பற்றி பச்சை பொய்
* ஒரு பொய்யிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்த பொய்களை கட்டவிழ்த்துவிடும் இபிஎஸ்

* காமராஜர், ஜானகி எம்.ஜி.ஆருக்கு இடம் தர மறுத்தோம் என உளறுகிறார் இபிஎஸ்
* சங்கி கூட்டத்தோடு சேர்ந்த இபிஎஸ், வாட்ஸ் ஆப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார்

* காமராஜர் மறைந்த போது சொந்த மகனை போல் இறுதி சடங்கு செய்தவர் கருணாநிதி
* ராஜாஜி மண்டபத்தில் தான் காமராஜர் உடலை வைக்க வேண்டும் என்றவர் கருணாநிதி
* காமராஜரை அடக்கம் செய்ய கொட்டும் மழையில் நனைந்தபடி இடம் தேர்வு செய்தார்

* பழனிசாமி கூறியது உண்மையெனில் அக்காலத்திலேயே சர்ச்சையாகி இருக்கும்
* ராமாவரம் தோட்டத்தில் ஜானகி எம்.ஜி.ஆர் படத்தை திறந்து வைத்தார் கருணாநிதி
* கோட்டையில் கூட ஜானகி எம்.ஜி.ஆர் படத்தை அதிமுக அமைச்சர்கள் வைக்கவில்லை

* முந்தாநாள் அடித்த காற்றில் முதலமைச்சரான இபிஎஸுக்கு என்ன தெரியும்?
* மேலும் மேலும் பொய் கூறினால் எடப்பாடி பழனிசாமி அசிங்கப்பட்டு போய்விடுவார்

Related Link
விஜய்யால் திணறிய புதுச்சேரி

விஜய்யால் திணறிய புதுச்சேரி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விரைவில் திருமணமா? நடிகை திரிஷா விளக்கம்

15
1 hr 16 mins agoshare
நடிகை திரிஷா திருமணம்?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved