news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திமுகவுடன் கைகோர்க்க இபிஎஸ் முடிவு - சி.வி.சண்முகம் புகார்
tv

Also Watch

tv

Read this

திமுகவுடன் கைகோர்க்க இபிஎஸ் முடிவு - சி.வி.சண்முகம் புகார்

தவெகவுக்கு ஆதரவு

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எந்த திமுகவை நாங்கள் எதிர்த்தோமோ, அதே திமுகவின் ஆதரவோடு ஆட்சியமைக்க, இபிஎஸ் விரும்பியதாக சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளரின் முன்மொழிவை கேட்டு, ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளானதாகவும் கூறினார்.

தமிழக முதல்வராக விஜய்...
இதுதொடர்பாக சி.வி.சண்முகம் கூறியதாவது;
சட்டமன்ற தேர்தலில், முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்து உள்ளனர். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ், சில முன்மொழிவுகளை முன்வைத்தார். இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். 53 ஆண்டு காலமாக அக்கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளோம். இந்த நிலையில், எங்கள் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், எந்த திமுகவை நாங்கள் எதிர்த்து வந்தோமோ, அந்த திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராக்க தேர்வு செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள், அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு எம்எல்ஏக்கள் யாரும் சம்மதிக்கவில்லை.

எந்த கூட்டணியிலும் இல்லை
நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். திமுக உடன் இணைந்தால், அதிமுகவே இல்லாமல் போய்விடும் என்று கூறினோம். ஆனால், அதை இபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. இதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் யாரையும் குறை சொல்லவில்லை. அதிமுக, இனி எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு முன்பு இருந்த எந்த கூட்டணியிலும் இனி, அதிமுக இருக்காது.

தவெகவுக்கு ஆதரவு
இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும். புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதன்படி, தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

எஸ்.பி.வேலுமணி தேர்வு
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்து உள்ளோம். கொறடாவாக சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற குழு துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதனடிப்படையில் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் தந்துள்ளோம்.
இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

Related Link
சபாநாயகரை இருக்கையில் அமரவைத்த உதயநிதி

சபாநாயகரை இருக்கையில் அமரவைத்த உதயநிதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,840 உயர்வு

2
6 mins agoshare
ஒரு சவரனுக்கு ரூ.1,840 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved