news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் - புதின்
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் - புதின்

ரஷ்யா

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புடின்

ஈரான் தொடர்பான மோதலும் விரைவில் முடிவுக்கு வரும் :

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 2-ம் உலகப் போரின் வெற்றி தின கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரான்-அமெரிக்கா இடையேயான பிரச்சினை மிகவும் சிக்கலானது எனவும், அந்த மோதலும் விரைவில் முடிவுக்கு வரும் எனவும், அவ்வாறு நடைபெறாவிட்டால் அனைவரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகளை திரும்ப பெறப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை :

இத்தாலியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப பெறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் இத்தாலி தங்களுடன் இல்லாததால், தங்களது படைகளை இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

பலூச் மற்றும் சிந்தி மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் :

கராச்சியின் கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், உள்ளூர் பலூச் மற்றும் சிந்தி மக்களை வெளியேற்றி, பாகிஸ்தான் அரசு நில அபகரிப்பில் ஈடுபடுவதாக பலூச் யக்ஜெஹ்தி கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பிருந்தே வசித்து வரும் பலூச் மக்களை "மேம்பாடு" என்கிற பெயரில் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டி உள்ளது.

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகார் :

இலங்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புத்த துறவியை போலீஸார் கைது செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 71 வயதான மூத்த புத்த துறவி பல்லேகம் ஹேமரத்னா கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தாயும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் முதல் 3 ஆம் பாலினத்தவர் எம்.பி :

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவர் முதல் எம்.பியாக தமிழகத்தை சேர்ந்த கியூ மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடின்பர்க் மற்றும் லோதியன்ஸ் கிழக்கு தொகுதியில் தான் பைனரி எனப்படும் மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிட்டு, தேர்தலில் களமிறங்கி அவர் வெற்றி பெற்றுள்ளார்.

Related Link
ரஷ்யாவும், உக்ரைனும் 3 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

ரஷ்யாவும், உக்ரைனும் 3 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau