ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 15 லட்சம் ரூபாய் வழங்கிய நடிகர் கார்த்திக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 15 லட்ச ரூபாய்கான காசோலையை வழங்கிய நடிகரும், உழவன் அமைப்பின் நிறுவனருமான கார்த்திக்கு நன்றியும் அன்பும் என குறிப்பிட்டுள்ளார்.