news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் அதிரடி
tv

Also Watch

tv

Read this

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் அதிரடி

அதிரும் சட்டப்பேரவை

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
andhra karnataka cm

கர்நாடகாவை தொடர்ந்து, ஆந்திராவிலும் சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்த 90 நாட்களுக்குள் 13 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் ஆந்திர சட்டப்பேரவையில், முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்து உள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
ஆந்திர மாநிலத்தில், 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று மாநில முதல்வர் கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும், அடுத்த 90 நாள்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

16 வயது வரை
இந்த தடையை 13 முதல் 16 வயது உடையவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் அறிவித்தார். இவ்வாறு, சிறார்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் மாநிலங்கள் அதிரடி முடிவை வெளியிட்டிருப்பது கவனம் பெற்று உள்ளது.

Related Link
16 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு எச்சரிக்கை

16 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு எச்சரிக்கை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
31 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved