ஆந்திர மாநிலம் நகரி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில்,10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருப்பதிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற தனியார் பேருந்து நகரி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்று பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.