Also Watch
Read this
தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் தொடங்கியது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கோவளம் அருகே நடக்கிறது.
முதல்வர் தலைமையில் கூட்டம்
தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் துவங்கியது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் வருகை
கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடக்கும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன

இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
தவெக தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய கூட்டணி மற்றும் கூட்டணியின் பெயர் குறித்து ஆலோசிக்க திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved