news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்
tv

Also Watch

‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

நடிகை பூர்ணா கர்ப்பம்

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து நயன்தாரா, கவின் நடித்து வெளியான ‘Hi’ படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கவின் முதல்முறையாக இணைந்து நடித்து ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று வெளியான 'Hi' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள பலத்த வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Hi' திரைப்படம் தனது முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.23 கோடி முதல் 1.25 கோடி ரூபாய் வரை நிகர வசூல் ஈட்டி சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திரைப்படத்திற்கான முன்பதிவுகளும், வசூலும் பல மடங்கு அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக ‘KING 100’
ர.கார்த்திக் இயக்கத்தில், நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக ‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'கிங்' நாகார்ஜுனாவின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று, அவரது மைல்கல் திரைப்படமான 100ஆவது படத்தின் தலைப்பு மற்றும் அதிரடியான க்ளிம்ப்ஸ் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஒரு நிமிடம் 20 நொடி ஓடும் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ, "என்னிடம் பணம் இல்லாதபோது என்னை லூசர் (Loser) என்றார்கள், பணம் வந்தவுடன் கிங் (King) என்கிறார்கள்; ஆனால் இந்த அடையாளமே பணத்தை விட சக்தி வாய்ந்தது" என்ற நாகார்ஜுனாவின் கணீரென்ற குரல் மற்றும் மாஸ் வசனத்துடன் தொடங்குகிறது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி அன்று கிறிஸ்மஸ் பண்டிகை வார இறுதியில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

என் குழந்தை 'Jailer Baby'
‘ஜெயிலர் 2’ படத்தின் ‘Ala Bolelo’ பாடலுக்கான படப்பிடிப்பு 6 நாட்கள் நடைபெற்றது. பிறகு தான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியவந்தது என, நடிகை பூர்ணா கூறி உள்ளார். இந்தப் பாடலை படமாக்கியபோது நான் கர்ப்பமாக இருந்ததே எனக்குத் தெரியாது. அதனால் இப்போது என் குழந்தையை ‘Jailer Baby’ என்று அழைக்கிறேன் என்றும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் இவரது முக பாவனைகளையும் நடனத்தையும் பார்த்து, "உன்னுடைய கண்களில் ஒரு தனித்துவமான பவர் மற்றும் தீவிரத்தன்மை இருக்கிறது" என மனதாரப் பாராட்டியுள்ளார். இயக்குநர் மகேஷ் பாபுவின் 'குர்ச்சி மடத்தபெட்டி' பாடலைத் தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2 படத்தின் மூலம் பூர்ணா மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

Related Link
நடிகை சமந்தாவின் கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள்

நடிகை சமந்தாவின் கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை இந்திய அணி வரலாற்று சாதனை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved