Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 7ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
8ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
9ஆம் தேதி செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved