Also Watch
Read this
By: Web Team
பிரேசிலின், குவாய்பா நகரைத் தாக்கிய கடுமையான புயலால் வீசிய பலத்த காற்று காரணமாக, சுமார் 78 அடி உயரமுள்ள சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது. கீழே விழுந்த வேகத்தில் சிலையின் தலை துண்டு துண்டாக நொறுங்கிய நிலையில், அருகில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டன. இப்பகுதியில், மணிக்கு 90 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved