Also Watch
Read this
By: Web Team

தோட்டக்கலைத் துறை தனித் துறையாக தொடர வேண்டும் என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பான பதிவில், தோட்டக்கலைத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, திறன், முதலீடு ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, இது தொடர்பான அரசாணைகளை முழுமையாக ரத்து செய்வதோடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved