Also Watch
Read this
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணி மீது புகார் அளித்த இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பின் செயலாளர் ஹரிஹரன், பவர்புல்லான காவல்துறை ஓராண்டாக குற்றவாளியை பிடிக்காமல் இருந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், வீரமணியின் ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவ் கையில் கிடைத்தது முதல் விஷயம் பூதாகாரமானது வரை விளக்கினார்.

12 வயதான சிறுமியை...
இதுதொடர்பாக, இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பின் தலைவர் ஹரிஹரன் கூறி இருப்பதாவது;
2025 அக்டோபரில் எங்கள் நிறுவனத்திற்கு பென்டிரைவ் கிடைத்தது. வீரமணி, சாந்தி ஆகிய இருவர்தான் குற்றவாளிகள் என அடங்கிய குறிப்புடன் வீடியோ இருந்தது. 12 வயதான சிறுமியை வயதானவர் வன்கொடுமை செய்தது வீடியோவில் தெரிந்தது.

புகார் கொடுத்தேன்...
கையில் கிடைத்த பென்-டிரைவை காவல் உதவி ஆணையரிடம் அளித்தோம். உதவி ஆணையர் அறிவுறுத்தலின்பேரில் புகார் கொடுத்தேன், மறுநாள் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கின் முன்னேற்றம் குறித்து இருமுறை போலீசாரிடம் கேள்வி கேட்டேன். விசாரணையில் இருப்பதாக போலீசார் கூறியதால் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.

வீரமணி வீட்டில்...
கடந்த மாதம் வீரமணி வீட்டில் சோதனை நடைபெற்று, ஹார்டு டிஸ்க், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த லோகோ உள்ளிட்டவற்றை பார்த்தபோது வீரமணி என தெரிந்தது. வீடியோவில் இருந்தது ஜெம் வீரமணி தான் என போலீசாரிடம் உறுதிப்படுத்தினேன். தொழிலதிபர், லஞ்சம், அரசியல் தலையீடு என்பதால் பூதாகரமான பாலியல் வழக்காக இது மாறியது.

20 நிமிட வீடியோ
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணியின் 20 நிமிட வீடியோதான் இருந்தது. ஆள் ஆளுக்கு கற்பனையுடன் சேர்த்து நிறைய வீடியோ இருப்பதாக கூறுகிறார்கள். பலரும் இஷ்டத்திற்கு கருத்துகளை சொல்லி மக்களை குழப்பி விட வேண்டாம்.

நீதி வேண்டும்...
வழக்கு விசாரணையில் தாமதம் குறித்து போலீசார் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை என நம்பி இருந்தேன். லஞ்சம், அரசியல் தலையீடு காரணமாக கிடப்பில் வழக்கு போடப்பட்டது. வீரமணியின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வேண்டும். பவர்புல்லான காவல்துறை ஒரே வாரத்தில் குற்றவாளியை பிடித்திருக்கலாம்.

எதற்கும் பயப்பட மாட்டேன்
ஒரு வருடத்திற்கு பிறகு தான் குற்றவாளியை பிடித்திருப்பதாக காவல்துறை மீது வருத்தம் இருக்கிறது. ஜெம் வீரமணி வழக்கில் நிறைய பேரின் தலையீடு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

போக்சோ வழக்கில் சிக்கி உள்ள வீரமணி போன்று பணத் திமிரில் செயல்படும் நிறைய ஆட்களை தடுக்க வேண்டும். பணத்தால் எதுவும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். பெரிய பிரச்சனை வரும் என நண்பர்கள், தெரிந்தவர்கள் என்னிடம் கூறினார்கள். தைரியம் அதிகமாக இருப்பதால் எதற்கும் பயப்பட மாட்டேன்.

கடும் தண்டனை வழங்க வேண்டும்
வழக்கை கைவிடுவதற்கு முன்னதாக எங்களுக்கும் போலீசார் சம்மன் அனுப்பினார்கள். எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை இந்த வழக்கில் எங்களுக்கு எந்த தொந்தரவும் வரவில்லை. வீரமணி போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஹரிஹரன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved