Also Watch
Read this
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா பாஸ் வழங்கியதில் முறைகேடு என்ற புகாருக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், தாம் யாருக்கும் பாஸ் கொடுக்கவில்லை என்றும், திமுகவை சேர்ந்த சிலர் பிரச்சனையை கிளப்புவதாகவும் கூறி உள்ளார்.

வழக்கம் போல் குற்றச்சாட்டு
இதுதொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என்னுடைய குடும்பத்தினருக்குக்கூட அனுமதிச்சீட்டு நான் வழங்கவில்லை. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதால் வழக்கம்போல திமுகவைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை
மின் பற்றாக்குறையை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறோம். பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இதே மாதிரியான மின்சார தட்டுப்பாடு எல்லா மாநிலங்களும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இல்லை.

மின் பற்றாக்குறையை போக்க...
மின்சாரப் பற்றாக்குறையை போக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த மாத இறுதியில்தான் காற்றாலை மின்சாரம் முடிவடையும். ஆனால் இந்த மாதம் தொடங்கிய உடனே அது முடிவடைந்துவிட்டது. தற்போது அக்டோபர் மாதத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

முதல்வரின் பயணம் வெளிப்படையானது. மக்களுக்கான பயணம். இது தொடர்பாக முதல்வர் தனித்தனியாக துறை ரீதியாக விளக்கி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved