news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் - டிஜிபி உறுதி
tv

Also Watch

tv

Read this

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் - டிஜிபி உறுதி

காவல்துறைக்கு ஒத்துழைப்பு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உறுதி அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், போதைப் பொருள் ஒழிப்பு, சைபர் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கவும் நடவடிக்கை என திட்டவட்டமாக கூறி உள்ளார்.

புதிய டிஜிபி நியமனம்
சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமையும் முன்னர், சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். அவர், இன்று ஜூன் 3ஆம் தேதி தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சிறைத் துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது;
தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி. முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கிறோம். தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு டிஜிபி தெரிவித்தார்.

Related Link
கருணாநிதி பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் மரியாதை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

6
5 hrs 40 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved