டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி வாழ்வா, சாவா போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் வலுவாக களமாடிய ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் தோற்றால், நடப்பு உலக சாம்பியன் என்ற பட்டத்தை துறந்து அப்படியே வெளியேற வேண்டியது தான் என்பதால், போட்டி மிகுந்த முக்கியத்துவம் கொண்டுள்ளது. உலக கோப்பை தொடர்... உலகக்கோப்பை தொடர் தொடங்கியது முதல் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை ஓடவிட்டு கெத்து காட்டியது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி. குரூப் ஸ்டேஜில் நடந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு விறுவிறு என்று நுழைந்தது. திணறடித்த தென்ஆப்ரிக்காஇதுவரை வெற்றிகளை மட்டுமே குவித்து வந்ததால், தென்னாப்பிரிக்கா அணியை இந்திய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டதோ? என நினைக்கும்படி, சூப்பர் 8 சுற்றில் படுமோசமான ஆட்டம். இந்திய பவுலர்களை தென்னாப்பிரிக்கா வீரர்கள் திண்றடித்தனர். வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா வீசிய பந்துகளை விரட்டி விரட்டி அடித்தனர். 20 ஓவர்களுக்கு 187 ரன்களை விட்டுக் கொடுத்த இந்திய வீரர்கள், பேட்டிங்கிலும் சொதப்பினர். 4 பேர் டக் அவுட், 2 பேர் தலா ஒரு ரன் என வெறும் 2 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட் பறிகொடுத்தது. இதையடுத்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மெகா வெற்றி பெற்றது. Most Underrated அணியாக ஜிம்பாப்வேஇந்த படுதோல்வியால், சூப்பர் 8 சுற்றில் மீதமுள்ள 2 போட்டிகளிலும், ரன்ரேட் அடிப்படையில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இப்படியான சூழலில் தான் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. ஜிம்பாப்வே அணியையும் சாதாரணமா எடுத்துக்க முடியாது. நடப்பு தொடரின் Most Underrated அணியாக ஜிம்பாப்வே உருவெடுத்துள்ளது. இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறுமா?உலகின் முன்னணி அணிகளையே கதறவிட்டு பல உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது ஆஸ்திரேலியா. ஆனால், அந்த ஆஸ்திரேலிய அணியையே நடப்பு தொடரில் ஓடவிட்டது ஜிம்பாப்வே. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேற முக்கிய காரணமாக இருந்தது ஜிம்பாப்வே. இதுமட்டுமின்றி, இலங்கை அணியையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. என்னதான் சூப்பர் 8ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், இன்னும் அந்த அணி வலுவான நிலையில் தான் இருக்கு. எனவே, இந்த போட்டியில எந்த அணி வெல்லும்? இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறுமா? என பொருத்திருந்து பார்ப்போம். Related Link டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ஹெட்மேயர்